பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. அச்சப் பத்து வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்புஎலாம் உருக நோக்கி அம்பலத் துஆடு கின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதுஅருள் பருக மாட்டா அன்புஇலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே (3) கிளிஅனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி துளிஉலாம் கண்ணர் ஆகித் தொழுதுஅழுது உள்ளம்நெக்கு இங்கு அளிஇலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே (4) பிணிஎலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோடு அழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்தும் கானாச் சேவடி பரவி வெண்நீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே -- (5) 598