பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சென்னிப் பத்து நங்கை மீர் எனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை மேய சேவகன் நாயகன் மங்கைமார் கையில் வளையும் கொண்டுஎம் உயிரும் கொண்டுஎம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப்பொலியுமே (3) பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் எனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை முதுார் நடம்செய்வான் எத்தன் ஆகிவந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டுளம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே (4) மாய வாழ்க்கையை மெய்என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் வேய தோள்உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான் காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டுகொள் என்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே - (5) 768