பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


‘பொய்ம்மை' என்ற சொல் குறிப்பதாகப் பலரும் உரை கூறியுள்ளனர்.

இவ்விடத்தில் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார் அவர்கள் கூறிய கருத்தைச் சுருக்கமாக அடியில் தந்துள்ளேன். எது சரியானது என்பதைப் படிப்போர் முடிவு செய்துகொள்ளலாம்.

திருவாசகத்திலுள்ள அறுநூற்று ஐம்பத்தெட்டுப் பாடல்களில், பொய்யன் என்றும், பொய்க்கு விதை என்றும் ஏறத்தாழ இருபத்தெட்டு இடங்களில் தம்மை அடிகளார் பாடியுள்ளார். இவ்வாறு குறிப்பிட வேண்டுமானால் அடிகளாரின் வாழ்க்கையில் அவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியொன்று நிகழ்ந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்குரிய விளக்கமான சான்றுகள் இன்றேனும், நம்பியின் திருவிளையாடற் புராணத்தில் வரும் ஒரு பாடல் உலகியலுக்குப் பொருத்தமாக அமைகின்றது. தம்மையும் தமது பூர்வ வாழ்க்கையையும் மறந்து இறைபணியில் ஈடுபட்டிருந்த அடிகளாரைப் பாண்டிய மன்னனின் காவலர் வந்து, மன்னன் அவரை அழைப்பதாகக் கூறினர். அப்பொழுது தம்மை மறந்த நிலையிலிருந்த அடிகளார் இவ்வுலகியலுக்கு இறங்கி வந்தபோது அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இப்பொழுது அவர் கூறியதாக நம்பியின் திருவிளையாடலில் பின்வரும் பாடல் இடம் பெற்றுள்ளது.

தென்னவன் அமைச்சனே யான்
என்ன காரியம் செய்தேன் இவுளி கொள்வதற்கே வந்தேன்
பொன்னினை அளித்தேன் அந்தோ புகல ஓர்
மாற்றம் உண்டோ?

என்ற முறையில் பேசிய அடிகளார், இறைவனை வேண்டிக்கொண்டு அரச ஆணையை விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்பொழுது அவர் மனத்திடை ஒரு குறிப்புத்