பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


காப்பாயாக. பாவியாகிய நான் உய்ய வேண்டுமானால் இது தவிர வேறு வழியே இல்லை என்கிறார்.


82.

ஈசனே நீ அல்லது இல்லை
     இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை
     பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட
     நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை
     சிந்தியாது சிந்தையே 78


பேதம்-வேறுபாடு. நீசன்-இழிந்தவன்.

‘பெருமானே! வீட்டுலகிலும் அதனை அல்லாத பிற உலகங்களிலும் உன்னையன்றி வேறு எதுவுமில்லை. பேதையேனாகிய யான்கூட, எல்லாப் பொருள்களிலும் நீயே உள்ளாய் ஆதலால், அவற்றிடைப் பேதமில்லை என்று பேசியுள்ளேன். இச்சொற்களின் ஆழம் தெரியாமல் கிளிப் பிள்ளைபோல் இச்சொற்களைப் பேசும் இத்தகைய என்னையும் வலிதில் வந்து ஆண்டுகொண்ட நின்னை அல்லால் வேறு யாரையும் என் மனம் சிந்தியாது' என்றபடி,


83.

சிந்தை செய்கை கேள்வி வாக்குச்
     சீர் இல் ஐம் புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை
     எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என்
      உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம்
    எய்தல் உற்று இருப்பனே 79

‘இறைவா! இப்பிறவி எடுத்தபொழுதே மனம், கன்மேந்திரியங்கள், கேள்வி, வாக்கு, ஐந்து பொறிகள் ஆகிய