பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அழைத்துச் செல்லப்பட அனைத்துத் தகுதியும் வந்துவிட்டதே! அப்படியிருந்தும் ஏன் விடப்பட்டார்? விடப்பட்ட அந்த நேரத்தில் அந்தத் துயரம் தாங்காமல் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியுள்ளார்போலும். அதனையே 'சிறிதே கொடுமை பறைந்தேன்’ என்கிறார்.

மனவருத்தம் காரணமாகக் கொடுமை பறைந்த பின்னர், விடுபட்டதற்குரிய காரணத்தை அமைதியாகச் சிந்திக்கிறார். அப்பொழுதுதான் அடிமனத்தில் இருந்த நினைவு மேலே வருகின்றது. அவர் விடப்பட்டதற்குக் காரணத்தை இதோ பேசுகிறார். சிவ மாநகர் குறுக அடியார் எல்லாம் போனார்கள். ஆனால் நான்மட்டுமா புறம்போந்தேன்? இல்லை, என் மனத்தை அழுத்தி நிற்கின்ற பொய்யும் அல்லவா என்னுடன் வந்தது என்ற பொருள்பட 'யானும் பொய்யும் புறமே போந்தோமே' என்கிறார்.


90.


புறமே போந்தோம் பொய்யும்
     யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா
     வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
     மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
     நின் தாள் சேர்ந்தாரே 86

சிறவு-சிறப்பு மற்றொன்று-பொய்.

இப்பாடலும் 'புறமே போந்தோம் பொய்யும் யானும்' எனத் தொடங்குகிறது. திருச்சதகம் அந்தாதியாக அமைந்திருத்தலின் இதற்கு முன்பாடல் ‘புறமே போந்தோமே என்று முடிவதால் இப்பாடல் புறமே போந்தோம்’ என்று தொடங்குகிறது என்று பொருள் கொண்டால் மிக இன்றியமையாத ஒரு கருத்தை இழந்து