பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 131


‘மீண்டு வாரா வழி அருள் புரிபவ (திருவா. 2-117) னாகிய அவனுடைய தொடர்பு கிடைத்தது; அவன் திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்டுடாகிவிட்டது.

திருப்பெருந்துறை நிகழ்ச்சி பூத உடலோடு, உடன் இருந்த அனைவரும் காண நேரிடையாக நிகழ்ந்தது. ஆதலின், அடிகளார் தம் பூத உடலில் உள்ள இரண்டு கைகளாலும் குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டார். இக்காட்சி மறைந்தவுடன் கைகளால் திருவடிகளைப் பற்றுகின்ற வாய்ப்பு இல்லை. ஆனால், உடலில் உறையும் நெஞ்சு அத்திருவடிகளை விடாது பற்றிக்கொண்டு அதனுடனேயே சென்றிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யவில்லை; உடல்மேலுள்ள பற்றுக் காரணமாகத் திருவடிகளை விட்டுவிட்டு உடம்புடனேயே தங்கிவிட்டது. ஆதலின், கடமையை மறந்த அந்த நெஞ்சின்மேல் சினங் கொண்டார். அதனால் 'பிணநெஞ்சே' (திருவாச. 35) என்றும், துணையிலி 'பிணநெஞ்சே' (திருவாச. 35) என்றும் சாடுகிறார்.

இத்துணை கூறியும் அந்த நெஞ்சு இந்த உடம்பை விட்டுவிட்டுத் திருவடியைப் பற்றுமாறில்லை. எவ்வளவு முயன்றாலும் உடம்போடு பிறந்ததாகிய இந்த நெஞ்சை நம்பிப் பயனில்லை என்றுணர்ந்த அடிகளார், இப்பொழுது இறைவனை நோக்கியே பாடுகிறார்.

நீத்தல் விண்ணப்பத்தில் வரும் ஐம்பது பாடல்களிலும் ‘என்னை விட்டுவிடாதே’ என்ற ஒரே கருத்து மீட்டும் மீட்டும் பேசப்படுகிறது.

நீத்தல் என்ற செயல் இப்பொழுது இறைவனைப் பற்றியதாகும். அடிகளாரை வேண்டாமென்று நீத்தல் செய்யும் ஆற்றலுடையவன், தலைவனாகிய அவன் ஒருவனே ஆவான். ஆதலின், தாம் எவ்வாறு இருப்பினும் தம்மைக் கைவிட்டு விடவேண்டா என்று விண்ணப்பம்