பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அதேபோன்று ஆன்ம முன்னேற்றத்தைத் தடைசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்தப் பொறிக்கோ புலனுக்கோ இல்லை. அந்தப் பொறி, உலகியலில் ஈடுபட்டுச் செயற்படும்போது மூலமாகிய மனத்தையும் உடன் இழுத்துச் செல்கிறது. இப்பொறிகளின் சேட்டையால் மனம் மிதிபடுதலின் அதனோடு தொடர்புடைய ஆன்ம முன்னேற்றமும் தடைப்படுகிறது.

126.

ஒண்மையனே திருநீற்றை உத்துளித்து
ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய்
மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு
அறிதற்கு அரிதுஆம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே
அலிப் பெற்றியனே

22

உத்துளித்து-பொடியாகப்பூசி.

இறைவன், அடியவர்கட்கு நெருக்கமானவனாகவும் அல்லாதவர்க்குச் சேயோனாகவும் உள்ளான் என்பதை மீட்டும் கூறுகிறார்.

‘அலிப்பெற்றியன்’ என்றதால் தன்மையைக் கூறுகின்றார் என்பதில் தவறில்லை. அதாவது பெண்தன்மை, ஆண்தன்மை, அலித்தன்மை என்றவாறாம். பெண்தன்மை மிகும்பொழுது உற்பத்தி நடை பெறுகிறது. ஆண்தன்மை மிகும்பொழுது அழிவு நடைபெறுகிறது. அலித்தன்மை மிகும்பொழுது உற்பத்தி, அழிவு என்ற இரண்டிலும் ஈடுபடாது இருத்தல் நடைபெறுகிறது. கூறப்பெற்ற மூன்றும் ஏகமாக இருக்கின்ற பரம்பொருள், சக்தியை வெளப்படுத்திப் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதையும், அச்சக்தியையும் உள்ளடக்கி அழித்தல் தொழில் செய்வதையும் குறிப்பதாகும். பெண், ஆண், அலி