பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 155


என்று கூறியவுடன் உலகத்தில் காணப்பெறும் பெண், ஆண், அலி என்று பொருள் செய்து கொள்ளவேண்டாம்.

அலித்தன்மை என்று சொல்லும்போது உலகியலில் காணப்படும் அலிகளை நினைந்து அவதிப்படத் தேவையில்லை. ஒர் உதாரணத்தின் மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமே கிருஷ்ணன் என்று பாகவதம் பேசுகிறது. அந்தக் கிருஷ்ணன் பாண்டவர்களுக்குத் துணையாக இருந்த போதும் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்ய நேரிட்டது ஏன்? இயற்கை, தன் செயலைச் செய்யும்போது கடவுளும் அதில் தலையிடுவதில்லை. ஆனால், தேவை ஏற்பட்டபோது இதே கிருஷ்ணன் அழித்தலையும் படைத்தலையும் செய்துள்ளான். ஆகவே, துவாரகையைப் படைக்கும்போது பெண்தன்மையும், அசுரர்களை வதைக்கும்போது ஆண்தன்மையும், ஒன்றிலும் தலையிடாமல் இருக்கும்போது அலித்தன்மையும் செயல்பட்டன.

பிரபஞ்சத்தைப் படைத்துவிட்ட இறைவன் அதற்குரிய சில சட்டதிட்டங்களை நியமித்தபிறகு, அப்பிரபஞ்சம் அந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தன்போக்கில் தொழிற்படுகையில் அதில் அவன் தலையிடுவதில்லை. இத்தன்மைகளே இங்குப் பேசப்பெற்றவை ஆகும்.

127. பெற்றது கொண்டு பிழையே பெருக்கி
சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய்
விடிலோ கெடுவேன்
மற்று அடியேன்தன்னைத் தாங்குநர் இல்லை
என் வாழ் முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன்
எனக்கு உள்ளவனே

23