பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


'வெறுந்தமியேன்' என்று கூறியதால் ஐவரின் எதிரே வேறு துணையின்றி இருக்கும் தன்மையைக் கூறினாராயிற்று.

இவ்வாறு அரிப்புண்டு அலமருகின்ற தம்மை விட்டுவிடாதே என்கிறார்.

கூற்றை உதைத்ததாகிய மணம் நிறைந்த மலர்போன்ற அத்திருவடிப் பதம், இறையுணர்வுடையோர், தேவதேவர் ஆகியோர், சென்று அடையத்தக்க வீடு பேறாகும் என்க.

130. பெரு நீர் அற சிறு மீன் துவண்டாங்கு
நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்
வியன் கங்கை பொங்கி -
வரும் நீர் மடுவுள் மலைச் சிறு தோணி
வடிவின் வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை வானக்
கொழு மணியே
26


வெள்ளைக் குருநீர்-வெள்ளைநிறத் தன்மையுடைய சிறிதளவு நீர். துவண்டாங்கு-வாடினாற் போல.

'குளத்தில் நிறைந்திருந்த நீர் வற்றியபோது அதிலுள்ள மீன்கள் நீரின்மையால் துடிப்பதைக் கண்டுள்ளோம். அதேபோல் திருப்பெருந்துறையில் நிறைகுளத்து நீர் போன்று உன் அருள் நிறைந்திருந்தபொழுது என்னை மறந்து துளையமாடினேன். இப்பொழுது அந்த அருளாகிய நீர்ப்பெருக்கு இங்கு இல்லை. எனவே, மீன் துடிப்பதுபோல் உள்ளிடு அற்றவனாகிய நான் துடிக்கின்றேன். என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.

131. கொழு மணி ஏர் நகையார் கொங்கைக்
குன்றிடைச் சென்று குன்றி