பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 171


அடியாரொடும் என் படிறு விரும்பு அரனே’ என்றார். படிறு என்பது வஞ்சகம் பொய் முதலியவற்றைக் குறிப்பதாகும். இவற்றை உடைய தம்மையும், தம்மோடு இவற்றையும் சேர்த்து ஏற்றுக்கொண்டதால் என் படிறு விரும்பு அரனே’ என்றார். விரும்பு என்ற சொல் ஏற்றுக்கொள்ளல் என்ற பொருளைமட்டும் இங்கே தந்து நிற்கிறது.

ஐந்து பொறிகளும் ஒரே மனத்தின் உதவி கொண்டு செயற்படுதலின் 'ஐவாய் அரவம்’ என்றார்.

140.

பொதும்பு உறு தீப்போல் புகைந்து எளிய
       புலன் தீக் கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்
       விரைஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று
       மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழும்தேன் அவிர் சடை
      வானத்து அடல் அரைசே 36


நறவம்-தேன். தாரம்-ஓர்வகைப் பண். மந்தம்- தாழ்த்திப் பாடும் ஓசை. அதும்பும்-அழுந்தும்.

‘பொதும்புறு தீ' என்பது காட்டுத்தீயைக் குறிப்பதாகும். 'உள்ளத்தை ஐம்புலன்களும் காட்டுத்தீப் போல் பற்றிக் கொள்ள, அத்திக் கொடுமை தாளாமல் யானும் என்னுள்ளமும் வெதும்புகின்றோம். என்னை விட்டு விடாதே’ என்கிறார்.

வெறும் தீ என்று கூறாமல் பொதும்புறு தீ என்று கூறியதில் நுணுக்கம் ஒன்றுண்டு, காட்டுத் தீயைப்பற்றி அறிந்தவர்களே அடிகளாரின் இந்த உவமையை நன்கு அனுபவிக்க முடியும். காட்டுத் தீக்கு ஒரு தனி இயல்பு உண்டு. ஓர் இடத்தில் பற்றி எரிகின்ற தீ, திடீரென்று