பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



200* திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வீதிவாய்க் கேட்டலும் விம்மினாள்; மேலும் மேலும் விம்மினாள்; அதன் முடிவில் மெய்ம்மறந்தாள். அதன் பயனாக அவளுடைய உடம்பு அநிச்சைச் செயலாக அமளியின்மேல் இங்கும் அங்குமாகப் புரள்கின்றது. இறையனுபவத்தில் ஆழ்ந்து 'மெய்ம்மறந்து ஏதேனும் ஆகாள் கிடந்தாள்’ என்பதனால் சமாதி நிலையை அடைந்துவிட்டாளோ என்று பொருள்கொள்ளவும் இது இடந்தருகிறது. இந்தக் கோணத்தில் நின்று, திருவெம்பாவை முழுவதற்கும் புதிய முறையில் எழுந்த சிந்தனையை இந்நூலின் பின்னுரையில் காணலாம்.


156.

:பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப் பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஒர் எம்பாவாய்
2


பாசம்-அன்பு.

சராசரி மனிதர்கட்கும், ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டுமென்று விரும்பி அதற்குரிய முயற்சியில் ஈடுபடுபவர்கட்கும், திருக்கோயில் முதலியவற்றிற்குக் செல்வதன் மூலம் தமது பக்தியை வளர்த்துக்கொள்ள முடியுமென்று நம்புபவர்கட்கும் பொதுவான சில இயல்புகள் உண்டு. இரண்டாம் வகையினர் பிறரிடம் பேசும்போது தம்முடைய முயற்சியை வெளிப்படையாகக் கூறவே மாட்டார்கள். மூன்றாம் வகையினர் எப்பொழுது யாரிடம் பேசினாலும், தம்முடைய மனம் முழுவதும் இறைவன் திருவடிகளிலேயே பதிந்துள்ளது என்றும்,