பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 281


பார்த்தபொழுது வேறுபட்டு நின்ற இந்தப் பிரபஞ்சம் அவன் அருளே கண்ணாகக் கொண்டு காணும்பொழுது ஒன்றாகவே நின்றுவிட்டது. அதாவது நாம, ரூபங்களைக் கடந்து எங்கும் நிறைந்த ஒரே பொருளாக அனைத்தும் காட்சியளித்தன. அந்த ஒன்றைத்தான் ‘சிவம் காட்டி’ எனறார்.

இத்தகைய காட்சி அனுபவம் அடிகளாருக்கு முன்னர் நாவரசர் பெருமானுக்குக் கிடைத்ததை, அவர் பாடல் மூலம் அறிய முடிகிறது. (திருமுறை 4:3) கயிலை மலையிலிருந்து யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைந்த போது, பிடியும் களிறுமாகக் காட்சியளித்த யானைகள் மெள்ள மெள்ள மறைகின்றன. மிகப் பெரிய வடிவுடைய யானைகள் மறைந்து, அவன் திருவடிகள் அந்த இடித்தில் காட்சியளிக்கின்றன. முதலில் களிறு வருவதைக் கண்டவர் நாவரசர் என்ற மனிதர். ஒரே விநாடியில் அக்காட்சி மறைந்து எங்கும் நிறைந்துள்ளவன் திருவடிகள் இப்போது காட்சி நல்கின. இக்காட்சி நாவரசர் என்ற மனிதரின் புறக்கண்களுக்கு அப்பாற்பட்டுக் கிடைத்த காட்சியாகும்.

முதலிற் கண்ட காட்சியையும் இப்போது கிடைத்த காட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்த வாகீசர் 'கண்டு அறியாதன கண்டேன்’ என்று பாடுகிறார். இந்த இறைக் காட்சி சித்தித்துவிட்ட பிறகு எங்கும் எதிலும் சிவத்தைக் காணுகின்ற சக்தி வந்துவிடுவதால் அதனையே வாகீசர் ‘கண்டறியாதன கண்டேன்’ என்று பாடுகிறார். இதனையே மணிவாசகப் பெருந்தகை காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டி’ என்றார்.

‘தாள் தாமரை காட்டி' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். உண்மையான சிக்கல் இங்கேதான் பிறக்கின்றது. முதலில் வேறுபாட்டில் ஒருமைப்பாட்டைக் காணுமாறு செய்தான். அந்த ஒருமைப்பாடே சிவ சொரூபம் என்பதை விளக்கினான். இப்பொழுது வீடு