பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எய்துவதற்குரிய தகுதிகள் அனைத்தும் அடிகளாரை வந்து அடைந்துவிட்டன. 'நாம் மேலை வீடு எய்த' 'காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டி' னான் என்பதுவரையில் வளர்ச்சி முறையும் பயனும் நன்கு பேசப்பெற்றுள்ளன.

இந்த நிலைக்குப் போனபின் 'தாள் தாமரை காட்டி’ என்று பருப்பொருளைக் கூறுவது மறுபடியும் அடிகளாரை இந்த உலக இயல்புக்குக் கொண்டுவந்துவிட்டான் என்பதை அறிவுறுத்துகிறது. உணவை வாய்க்குள் வைக்கப் புகும்பொழுது கையைத் தட்டிவிட்டதுபோல, மேலை வீடெய்தச் சிவம் காட்டியவன் அந்த நிலையினின்றும் கீழே இறக்கிப் பருப்பொருளாகிய 'தாள் தாமரை காட்டி' னான் என்று கூறுவது கற்கின்ற நமக்கே மருட்சியைத் தருவதாகும். இதனையே அடிகளார் 'கிறி (வஞ்சனை) செய்தவாறு' என்று கூறுகின்றார்.

அவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்து கீழே வந்தமையின் தம்மை மேலே அழைத்துச் சென்றவன் கீழே இறக்கி வஞ்சனை செய்துவிட்டான் என்று பேசுவதில் நியாயம் இருக்கிறது.

முன்னர் அகவலில், குருநாதர் தம்மை இங்கு விட்டுச் சென்ற காரணத்தை அடிகளாரே விளக்கியுள்ளார். ‘பரா அமுது ஆக்கினன்’ (திருவாச. 3-181 என்றும் 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' (திருவாச 2-128) என்றும் தாம் இங்கு விடப்பட்ட காரணத்தை அடிகளாரே கூறியுள்ளார். வீடு எய்துவதற்கு உரிய வாய்ப்புப் பெற்றிருந்தும் குருநாதர் ஒரே விநாடியில் தம்மை இங்கு விட்டுச் சென்றமையின் 'கிறி செய்தான்' என்று அடிகளார் வருந்துவது நியாயமானதே ஆகும்.

181.
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை