பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நிலைபேறாய்' என்றதனால் அந்தச் சத்தியத்திலேயே நிலையாக உறைபவன் என்ற பொருள் பெறப்படும்.

உலகிடைக் காணப்படும் பொருள்கள் பொறி புலன்களால் காணப்படாத உள் பொருள்கள் ஆகிய அனைத்திற்கும் தானே நிலைக்களனாக உள்ளவன். “தானேயாய்" என்று கூறியமையின் அப்பொருள்களும் அவனுடைய வடிவே என்க.

அவன் சத்திய சொரூபி, சர்வ வியாபி என்ற பெயர்களின் விளக்கமாக இத்தொடர்கள் அமைந்திருத்தலைக் காணலாம்.

மெய்ம்மையில் தோன்றியும், அதிலேயே நிலைபெற்றும் என்று கூறியது ‘சத்’ என்ற வடசொல்லின் விளக்கமாகும். இவ்வனைத்தும் 'ஏகம் சத்’ என்ற வடமொழி வழக்கிற்கு விளக்க உரைபோன்று அமைந்துள்ளது.

இத்துணைப் பெரியவனாக இருப்பினும் உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையினால் நம்மிடை வந்து நம்மை ஆட்கொள்பவன்; ஆதலால் அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டா, அவன் நம்முடையவன் என்ற கருத்துப்பட 'நம் சிவனை' என்றார்.

187. கை ஆர் வளை சிலம்பக் காது ஆர் குழை ஆட
மை ஆர் குழல் புரளத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெள் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய் 13


சேர்ந்து அறியாக் கையானை-குவித்தறியாத கையினை உடையானை ; தான்வணங்குந்தரத்தினர் பிறரின்மையால்.