பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கண்ணீர் பெருகுதல் ஆகியவை இந்த உடம்பின் செயல்கள் அல்லவா? இந்த உடம்பிற்குக் கர்த்தா அடிகளார் அன்றோ? அவர் எப்பொழுது விரும்பினாலும், இவற்றைச் செய்ய முடியுமே. அப்படியிருக்க, மனம் நையவும், கண்ணிர் ஆறாகப் பெருகவும் ஐயன் அருள் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறார்?

மனத்தின்கண் இன்பம், துன்பம் ஆகிய எந்த உணர்ச்சி ஆழமாகத் தோன்றினாலும் மனம் நையும், கண்ணீர் பெருகும். ஆக, கைகள் தலைமேல் குவிய வாய்ப்பே இல்லை. அதனைக் கூறியதால், இன்ப துன்பமாகிய இரண்டு உணர்ச்சிகளையும் நீக்கிவிட்டு, வேறு ஏதோ ஒர் உணர்வை வேண்டி நிற்கின்றார் என்பது வெளிப்படை அந்த உணர்வு என்ன என்பதை வெளிப்படையாகக் கூறாமல், குறிப்பால் உணர்த்துகின்றார்.

இன்ப, துன்ப உணர்வுகள் ஆழமாக மனத்திடைத் தோன்றவேண்டுமாயின் அவற்றிற்குக் காரணமாக ஏதாவது ஒன்று இருத்தல் வேண்டும். இந்த மனம் எதில் அதிகம் ஈடுபட்டு, எதைப் பற்றிக்கொண்டு நிற்கின்றதோ அதுவே இன்ப, துன்ப உணர்வுக்குக் காரணமாகும். இவற்றை ஆசா பாசங்கள் எனக் குறிப்பர். இவை காரணமாகத் தோன்றும் பற்றே இன்ப, துன்ப உணர்வுக்குக் காரணமாக அமைகின்றது.

'இந்திராதி போகம் வேண்டிலேன்’ என்று அடிகளார் கூறுவதால், அந்த ஆசா பாசம் காரணமாகத் தோன்றும் பற்று அவர்மாட்டு இல்லை என்பது வெளிப்படை.

ஆசா பாசங்களைத் துறத்தல் என்பது எதிர்மறைச் செயலாகும். மனம் இந்தப் பற்றுக்களை விடவேண்டும் என்று விரும்பினால், அந்த மனத்திற்கு வேறு ஏதாவதொரு பற்றைத் தந்துதீர வேண்டும். ஏதாவதொரு பற்றுக் கோடில்லாமல் தன்பால் உள்ள பற்றுக்களை மனம்