பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 353


விநாடியில் அந்தக் கல்லைப் பிசைந்து கனியாக்கினார். அத்தகைய பேராற்றல் படைத்தவர், தாம் எவ்வளவு பிழை செய்தாலும் அதனை மன்னித்து ஏற்கும் இயல்புடையவர் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த அடிப்படையில்தான் ‘இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே (98) என்ற பாடல் பிறக்கின்றது.

திருச்சதகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உள் தலைப்புகளை எல்லாம் ஒருசேர ஒதுக்கிவைத்துவிட்டு, சதகம் முழுவதையும் மனத்துள் கொண்டு சிந்தித்தால் ஒரு சில சிந்தனைகள் தோன்றுகின்றன.

‘மெய்தான் அரும்பி’ என்று தொடங்கும் முதல் பாடல், இறையனுபவத்தின் உச்ச கட்டத்தில் தோன்றிய பாடலாகும். இதற்கு நேர் எதிராக, துணையிலி பிணநெஞ்சே என்று வரும் பகுதி அனுபவத்தை இழந்து வருந்தும் ஒரு நிலையாகும். இந்த இரண்டு நிலைக்கு உட்பட்டு அடிகளாரின் மனநிலை ஊசலாடுகின்றது. இறையனுபவம் உட்பட எந்த அனுபவமும் உடம்போடு ஒருவன் இருக்கின்றவரை, ஒருபடித்தாக நிலைத்து நிற்பதில்லை. ஏறுவதும் இறங்குவதும், திடீரென்று காணாமல் போவதும் - அதேபோலத் திடீரென்று தோன்றுவதும் அனுபவத்தின் இயல்பாகும். எனவே, அனுபவத்தின் உச்சகட்டத்தை அறிவிக்கும் திருச்சதகத்தின் முதற்பாடலும், 'துணையிலி பிணநெஞ்சே'(35) என வரும் பாடலும், இந்த ஏற்ற இறக்கங்களுக்கு உதாரணமாகும். இந்த அனுபவத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மனித நம்பிக்கையும் அதனோடு சேர்ந்து ஏறி இறங்கும் இயல்புடையதாகும். இவ்வாறு கூறுவது சிலருக்கு வியப்பையும் சினத்தையும் உண்டாக்கலாம். அனுபவம் அலைபோல ஏறுவதும் இறங்குவதும், நம்பிக்கையும் அதனோடு சேர்ந்து ஏறுவதும் இறங்குவதும் நம்போன்ற சாதாரண மனிதர்களுக்குக் கூறுவது சரி. அடிகளார்போல