பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்னைத் தாங்கிக் கொள்ளே’ என்பதே அந்தத் தொடராகும்.

தளர்தல், அடிகளாரைப் பொறுத்ததாகும். தளர்ச்சி அடைந்து விழப்போகிறோம் என்ற அச்சம் அடிகளார் மனத்தில் தோன்றுகிறது. எனவேதான், விழப்போகின்றவனைப் பின்னிருந்து இரண்டு கைகளையும் கொடுத்துத் தாங்கிக்கொள்வதுபோல், தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இக்கருத்தைச் சற்று விரிவாகக் காணவேண்டும். பசியுற்றிருப்பவர், நோயுற்றிருப்பவர் என்ற இருவருக்கும் பசியையும் நோயையும் போக்கிவிட்டால் அதன்பிறகு அவர்கள் தாமே இயங்க முற்படுவார்கள்; பிறருடைய உதவி தேவையில்லை. பெருந்துறையில் ஆட்கொண்டு, இறையனுபவத்தைத் தந்து, அடிகளாரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைக் குருநாதர் உண்டாக்கிவிட்டார் அல்லவா? எவ்வாறு ஆட்கொண்டார்? திருவடி தீட்சை செய்தார்; அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்தார். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு, அவ்வழியைப் பின்பற்றி, அடிகளார் தாமே செல்ல வேண்டும் என்று இறைவன் கருதினால் அதில் தவறு என்ன இருக்கின்றது?

அவ்வழியைப் பின்பற்றிச் சென்று, சதா சர்வ காலமும் இறையனுபவத்தில் மூழ்கி இருக்கவேண்டும் என்று அடிகளார் விரும்புகின்றார். அது நடவாதபோது அச்சம் தோன்றுவது இயல்புதானே? எனவேதான், ஐம்பது பாடல்களிலும் ‘என்னைக் கைவிட்டுவிடாதே’ என்று பாடுகிறார்.

முதற் பாடலில் கைவிட்டுவிட வேண்டாம் என்ற விண்ணப்பத்தோடு மற்றொரு விண்ணப்பத்தையும் வைக்கின்றார். 'தளர்ந்துவிட்டேன் என்னைத் தாங்கிக் கொள்’ என்று சொல்லும்பொழுது ஒரு புதிய