பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 389


அடிகளார் நினைக்கின்றார். ஆதலின், அத்திருவடிகளை நூற்றுக்கணக்கான பாடல்களில் விடாது பாடிக்கொண்டே வருகிறார்.

‘நமச்சிவாய வாஅழ்க’ என்று ஒலிவடிவாக இறைவன் உள்ளான் என்று தொடங்கிய உடனேயே அடுத்து நினைவுக்கு வருவது 'நாதன்தாள் வாழ்க’ என்ற அவனது திருவடிகளே ஆகும். இந்த நினைவு சிவபுராணத்தின் பதினைந்து அடிகள் கடக்கின்றவரை அடிகளாரைவிட்டு நீங்கவில்லை.

இங்குப் பேசப்பெற்ற திருவடி என்ற சொல்லுக்குத் திருவருள் என்ற சாத்திரப் பொருள் கொண்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அடிகளார் குறிப்பது குருநாதரின் திருவடிகளைத்தான்.

இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு திரு அம்மானைப் பாடல்களைப் பார்ப்பது நலம். திருவெம்பாவையின் இறுதிப் பாடலில் விரிவாகப் பேசப்பெற்ற திருவடியே, அம்மானையின் இருபது பாடல்களில் ஐந்து இடங்களுக்குமேல் இடம்பெற்றுள்ளது.

எங்கோ சுற்றித் திரிந்த தம்மை ஈர்த்து ஆட்கொண்டது. அத்திருவடிகள் ஆதலால், தம்முடைய மாற்றத்தைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அத்திருவடிகள் அல்லவா இம்மாற்றத்தைத் செய்தன என்று இறும்பூது எய்துகிறார். கீழ்வரும் திரு அம்மானைத் தொடர்கள் மேலே கூறிய கூற்றை மெய்பிப்க்கின்றன.

அறை கூவி வீடு அருளும் அம் கருணை வார்கழல்

(175)

வான் வந்த வார்கழலே

(178)