பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



33, விச்சை தான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே 29

அச்சன்-தந்தை. செச்சை-வெட்சி. மலர்புரை-மலரை ஒத்த.

அமைச்சராக இருந்த அடிகளார் சாதாரண செப்பிடு வித்தைக்காரர்களையும், உயர்ந்த நிலையில் அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற பெரியோர்களையும் கண்டிருத்தல் கூடும். ஆனால், இவர்களுள் எவரும் செய்ய முடியாத ஒரு வித்தையைத் திருப்பெருந்துறைக் குரு ஒரு விநாடியில் செய்துவிட்டார் ஆதலால் ‘விச்சைதான் (வித்தை) இது ஒப்பது உண்டோ என்று பேசுகிறார். அப்படிச் செய்யப் பெற்ற வித்தை யாது?

ஒரு கனியை உண்ணவேண்டுமானால் கையில் கிடைத்த காய், கனியாக மாறும்வரை காத்திருந்து உண்ண வேண்டும். அதுபோலத் திருவாதவூரார் என்ற சராசரி மனிதரைப் பல்வேறு பிறப்புக்கள் எடுக்குமாறு செய்து அடியாராக மாற்றியிருத்தல் வேண்டும். காய் கனியாவதற்குக் காத்திருத்தல்போல், அது இயல்பான நிலை. ஆனால், திருப்பெருந்துறைக் குரு, மாபெரும் வித்தைக்காரர் ஆதலால் காய் கனியும்வரை காத்திராமல், ஒரே விநாடியில் காயைக் கனியாக்கிவிட்டார். அதனையே ‘மிகுகாதல் அடியார்தம் அடியனாக்கி’ என்கிறார் அடிகளார். .

அடியாராக ஆக்கியதோடு குரு நின்றுவிடவில்லை. எந்த நிலையிலும் உயிரைவிட்டு நீங்காத, 'உயிர் அச்சத்தை'