பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 59



மனம் விரும்பும் எண்ணிலடங்கா இன்பங்களை ஒன்றுவிடாமல் அனுபவித்தாலும் இம்மனத்தில் தோன்றும் ஆசை அடங்குமாறில்லை. இதனைக் குறிக்கவே 'கிற்றவா (வல்லவாறு) கெடுவாய் மனமே' என்றார்.

திருப்பெருந்துறை அனுபவத்தின் பெரும்பகுதி மறைந்துவிட்ட நிலையில் அந்த அனுபவத்தைத் தந்தவரையும் அவரது சிறப்பையும் எண்ணிப்பார்க்கிறார் அடிகளார். அவரிடம் ஆட்படவேண்டுமானால் தம்மை முழுவதுமாக விற்க வேண்டும் என்ற நிலை வந்தாலும், அதற்கும் தகுதியுடையவர் குருநாதர் என்கிறார்.

தம்மை விற்றுக்கூட ஆட்படுவதற்கு உரியவரின் தளிர்போன்ற திருவடிகளை மறந்துவிட்டு, இந்தப் பாழும் மனம், விஷய சுகங்களில் ஈடுபட்டு நிலையில்லாத திருப்தியை அடைந்து மகிழ்கின்றது. இது என்ன வேடிக்கை!

39.

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
      அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
       கசிந்து உணர்ந்திருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும்களன்
       செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை
        பரகதி புகுவானே 35

களவு-வஞ்சம் முதலிய களவு ஒழுக்கங்கள். உள கறுத்து-உள்ளனவற்றை வெறுத்து; அதாவது பொறி நுகர்ச்சிகளாகிய போகங்களை வெறுத்து. பெருங்களன்-இறைவன் தங்குதற்குரிய பெரிய இடம். பளகு-குற்றம்.

சூக்கும சரீரத்துடன் வாழும் தேவர்களும்கூட இத்தகையவன் என்று அளவிடமுடியாத பெருமையன் ஆயினும் அடியவர்களுக்கு எளியவனாகவும் அருள்