பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வெளிவரும் குஞ்சைப்போலப் புலன்கள்மேல் பற்று வைத்திருக்கும் இவ்வுடம்பை விட்டு உன்னை அடைதல் எந்நாளோ? என்க.

49.

போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரைத் தாள் உறும்
கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே 45

உள்ளன்புடையார் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து நின்று, புரண்டு, அலறி, ஆற்றல்மிக்க அன்புசெய்து அவனது திருவடியைப் பெறுவர்.

இதன் எதிராக மார்க்கண்டனை வெளவ வேண்டி இறைவனையே எதிர்த்து நின்ற காலதேவன் இறைவனால் உதைக்கப்பெற்றமையின் அத்திருவடி சம்பந்தம் பெற்றான். ஆற்றல் மிக்க அன்பு தம்பால் இல்லையாதலால் காலனைத் தண்டித்ததுபோல் தம்மையும் தண்டிக்கும் பொழுதுதான் அவன் திருவடிப்பேறு கிட்டுமோ-என்கிறார்.

50.

கொள்ளும் கில் எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும் வண்டும் அறா மலர்க் கொன்றையான்
நள்ளும் கீழ் உளும் மேல் உளும் யா உளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே 45

நள்-நடு. கொள்ளும் கில்லெனை-எனை ஏற்றுக் கொள்வானோ. கூய்-கூவி. நள்ளும்-நெருங்குதல்.

‘தேன் நிறைந்த கொன்றை மலர்களை அணிந்த பெருமான் ஏனைய அடியார்களைப்போல என்னையும் கூவி அழைத்துப் பணிகொள்ள வல்லவன்(கொள்ளுங் கில்) 'கொள்ளும் கில்' என்ற பாடத்திற்கு மாறாகக் ‘கொள்ளும் கொல்’ எனப் பாடங்கொண்டு என்னையும்