பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 79


அறிவு இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே {
{gap}}50

‘அறிவு வடிவானவனே! நீ என்னை ஆட்கொண்ட பொழுது நான் பேரறிவு படைத்தவனென்றோ கருதினாய்? முற்றறிவினனாகிய நீ, நான் மெய்யறிவு இல்லாதவன் என்பதை அறிவாய் அல்லவா?'

‘நீ ஆண்டுகொண்ட பிறகும் இப்பொழுதாவது நான் பேரறிவு படைத்தேன் என்றோ இல்லையென்றோ எனக்குத் தெரியவில்லை. என்னை நான் உணர்ந்து கொள்ளவும் நீதான் அருள் செய்ய வேண்டும்’ என்கிறார்.

அநுபோக சுத்தி

55.

ஈசனே என் எம்மானே
       எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று
      அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு
      நினைக்கமாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே
      செய்வது ஒன்றும் அறியேனே 51

தேசன்-ஒளியையுடையவன்.

பொல்லா நாயான நீசனேனை ஆண்டாய் என்று கூறுவது ஓர் உட்பொருளைக் கொண்டதாகும். நாய் என்று தம்மைப் பல முறை அடிகளார் கூறிக்கொள்வது பல பாடல்களில் காணப்பெறும். இந்த இடத்தில் நாய்க்கு இரண்டு அடைமொழிகள் தரப்பெறுகின்றன. பொல்லா (நாய்) என்பது ஓர் அடை; நீசனான (நாய்) என்பது மற்றோர் அடை.