பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கக்கியதை மீட்டு உண்ணும் நாயின் செயலை வெறுத்த நம் முன்னோர், நாயை இழிபிறவி என்று கூறினர். எத்துணை இழிபிறவியானாலும் மனிதரிடம்கூட அதிகம் காணப்பெறாத நன்றியறிதல் நாயினம் முழுவதற்கும் உண்டு. ஆதலின் அந்த இயல்பை நீக்குவதற்குப் 'பொல்லா நாய்’ என்றார்.

நீசனான நாய் என்று கூறுவது நாய் இனத்திற்குரிய காத்தல் தொழிலையும் செய்யாத நாய் எனப் பொருள் தந்துநிற்கிறது. இருக்கவேண்டிய இயல்பைப் பெற்றிராமல் இருப்பவர்களை நீசன் என்று கூறுவது மரபு. நீசனேனை என்றதால் மனிதர்க்குரிய பொதுப்பண்பும் தம்மிடம் இல்லை என்றவாறு.

இவ்வாறு இருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் நீ என்னை ஆண்டாய். ஆண்ட பிறகாவது நீ செய்த பேருப காரத்தை நினைந்திருக்க வேண்டும். நினையாமல் இருந்து விட்ட நான் சராசரி மனிதரிலும் நீசனாகி விட்டேன்

‘இந்த நிலையில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவனாக இருக்கின்றேன்’ என்கிறார்.

56.

செய்வது அறியாச் சிறு நாயேன்
       செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும்
       பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம்
        மேவக் கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு
         இருப்பது ஆனேன் போர் ஏறே 52

வெறி-மணம்.

‘அற்ப நாய்போன்றவனாகிய நான் மாபெரும் பேறு பெற்றும் இப்பொழுது செய்வதறியாது திகைக்கின்றேன்.