பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அந்த துணுக்கத்தைத்தான் அடிகளார் சேடு எறிய மெய் குளிர்ந்து என்று பாடுகிறார். காளத்திநாதன் என்பது தோன்றா எழுவாய். மெய் குளிர்ந்து அங்கு அருள் பெற்று நின்றவர்’ என்ற தொடருக்குக் காளத்திநாதர் மெய்குளிர்ந்தமையால், அங்கு அதே இடத்தில் அவன் அருளைப் பெற்று நின்றவராகிய திண்ணனாரின் அன்பைப் பாடி ஆடுவோம் என்கிறார். சேடு+அறிய எனப் பாடங்கொண்டு 'பெருமை விளங்க' எனப் பொருள் கூறுவாரும் உளர். பொருள்பற்றிச் செய்கின்ற பூசனைகளில் எந்தவொன் றும் திண்ணனார் பூசனையில் இடம் பெறவில்லை. அப்படி யிருக்க, ஆகம விருத்தம் (முரண்பட்டது) என்று சொல்லக் கூடியவற்றையே கொண்டு பூசனை செய்த திண்ணனார், இரண்டு பேறுகளைப் பெற்றார். ஒன்று இறைவனை மெய்குளிரச் செய்தது; இரண்டு அவன் அருளை உடனடியாகப் பெற்றது. இந்த இரண்டுமே பொருள்பற்றிச் செய்கின்ற பூசனை யில் கிடைக்கவில்லை என்றால், திண்ணன் செய்த பூசனை யின் தனிச் சிறப்பு என்ன? அப்பூசையின் தனிச்சிறப்பை ‘விருப்புற்று' என்ற ஒரே சொல்லில் அடிகளார் குறிக்கின் றார். அன்பு கொண்டு என்ற பொருளைத் தரும் விருப் புற்று என்ற சொல், இங்கு அன்பே வடிவாய் ஆகி' என்ற பொருளைத் தந்து நிற்கிறது. பொருள்பற்றிச் செய்யப்படுகின்ற பூசனையில் அன்பு இருக்கலாம். ஆனால், பயன்படுத்தப்பெற்ற பொருட்கள், செய்யப்பெற்ற கிரியைகள், சொல்லப்படும் மந்திரங்கள் என்பவற்றிலேயே பெருமளவு கவனம் செலுத்தப்படுவதால் அன்புக்கு என்று பெரிய இடம் ஒன்றும் அங்கிருப்பதற் கில்லை.