பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தோனோக்கம் 177 ஆனால், திண்ணனாருடைய பூசனையில் இவை ஒன்றும் இடம் பெறவில்லை. இவற்றையெல்லாம் யாரோ செய்தார்கள் என்பதை நாணன்மூலம் கேள்விபட்ட திண்ணனார் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி அவற்றைத் தாம் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்கின்றார். இவற்றைக் கிரியைகள் என்று அவர் நினைக்கவேயில்லை. எனவே, அவருடைய பூசனையில் அன்பு ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அன்பே வடிவாக மாறிவிட்ட திண்ணனாருடைய கால், அதிலுள்ள செருப்பு, அவருடைய வாய், அதில் கொண்டு வந்த நீர் ஆகிய அனைத்தும் அன்பே ஆதலால், அன்பே வடிவான இறைவன் அதனை ஏற்றுக் கொண்டதில் புதுமை ஒன்றும் இல்லை. அடிகளாரின் இந்த ஒரு திருப்பாட்டே சேக்கிழார் பெருமான் கண்ணப்பர் வரலாற்றை விரிவாகப் பாட உதவிற்று. இந்தப் பாடல் முழுவதையும் ஒரே வாக்கியத்துள் கொண்டுவர நினைத்த சேக்கிழார் பெருமான், Y S C S C S C C S C C C C C C C C C C AAAA S S S S S S S S S S SSS YY SSS ...................யாக்கைத் பிதன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய் திரிவார் (கண்ணப் 154) என்று கண்ணப்பரை விவரிக்கின்றார். 318. கல் போலும் நெஞ்சம் கசிந்து உருகக் கருணையினால் நிற்பானைப் போல என் நெஞ்சின் irT புகுந்தருளி, நல் பால் படுத்து என்னை நாடு அறியத் தான் இங்கன் சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ 4 கல் போலும் நெஞ்சம் - கல்லைப்போல் வலிய நெஞ்சம். நிற்பானைப்போல - என்கண்ணெதிர் நிற்பவனைப் போல, நற்பாற்படுத்து - நன்னெறியில்செலுத்தி நல்லூழோடுகூட்டி என்றுமாம். சொற்பாலது ஆனவா - புகழ்ந்துபேசும் தன்மையில் ஆன விதத்தை.