பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வாசனைப் பொடியில் தனித்தனியான வாசனையு டைய பல பொருட்கள் மஞ்சளுடன் ஒன்றாகச் சேர்ந்து புதியதோர் மணத்தைத் தருவதுபோல, இங்கும் சத்தியப் பொருள் மன, வாக்கு, காயங்களுடன் சேர்ந்து புதிய வடிவம் பெறுகின்றது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நிற்கின்ற ஒரு பொருளுக்கு- சத்தியமே வடிவான அந்தப் பொருளுக்குமனம் வாக்குக் காயங்களின் சத்தியம், பூசும் பொருளாகவும் அமைகின்றது. சத்திய சொரூபி எனப்படும் தில்லைவாணனுக்கு, நம்முடைய மனம் வாக்குக் காயம் ஆகியவை முழுதும் சத்தியமாக மாறியவுடன் அவன் பூசிக்கொள்வதற்குரிய பொருளாக இவை சிறப்புப் பெறுகின்றன. மனம், வாக்கு, காயம் ஆகியவை சத்தியத்துடன் கலக்கும்பொழுது அது மெய்யன்பாக மலர்கின்றது. இந்த மெய்யன்பே தில்லைவாணன் பூசிக்கொள்ளும் மணப் பொடி என்கிறார் அடிகளார். 204. முத்து அணி கொங்கைகள் ஆட ஆட மொய் குழல் வண்டு இன்ம் ஆட ஆட சித்தம் சிவனொடும் ஆட ஆட செம் கயல் கண் ப்னி ஆட ஆட பித்து எம்பிரானொடும் ஆட ஆட பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருணையொடு ੱ- ੬ੋ ஆடப் பொற்கண்ணம் இடித்தும் நாமே 10 பொற்சுண்ணம் இடிக்கின்ற மகளிரை முன்னிலைப் படுத்தி இப்பாடல்கள் தோன்றின என்பது உண்மைதான். இப்பாடலில் பல்வேறு ஆபரணங்களை அணிந்த மகளிர் ஒன்றுசேர்ந்து பொற்சுண்ணம் இடிக்கும்போது அவர்