பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்சுண்ணம் 17 உடல் உறுப்புகளையும், அந்த உறுப்புகளில் அணியப் பெற்ற ஆபரணங்களையும் முதலடியில் குறிப்பிடுகிறார். புற உடம்பில் நிகழும் இந்த ஆட்டத்தை விவரித்துக் கொண்டிருக்கும்பொழுதே அவர்களில் ஒருத்தி அதீத நிலைக்குப் போவதை அடிகளார் காண்கின்றார். தாம் முன்னர் இந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆதலின் அதனையே அவள்மேல் ஏற்றிப் பாடுகின்றார். அன்பு என்பது புறமனத்திடைத் தோன்றுகின்ற ஓர் உணர்வாகும். விலங்குகளிடமும் காணப்பெறும் அந்த அன்பை மிகப் பெரிதாகப் பெரியோர்கள் பாராட்டு வதில்லை. இதே அன்பு புறமனத்தைத் தாண்டி, அகமனத்துள் நிறைந்து வழிந்து ஓடி, சித்தத்தின் மேற்பரப்பில் நிறைந்து, இறுதியாக எளிதில் அணுகமுடியாத சித்தத்தின் அடிப்பரப்பில் நிறைந்துவிடுகிறது. சித்தத்தின் அடிப்பகுதியில் இந்த அன்பு நிறைந்த பொழுது, அதன் பழைய இயல்பு மாறி, முழுவதும் இறைவனிடம் செலுத்தப்பெறும் பெருங்காதலாக மாறிவிடு கிறது. அந்தக் கருத்தைத்தான் 'சித்தம் சிவனொடும் ஆட; ஆட' (ஆ.. ஆ.பொருந்த) என்றார் அடிகளார். - புறமனம், அகமனம், மேல்சித்தம், அடிச்சித்தம் என்பவற்றின் இடையிலுள்ள வேறுபாட்டை அடிகளார் நன்கு அறிந்திருந்தாாாதலின் 'தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி’ (திருவாசகம்: 4-42) என்பது போன்ற தொடர்கள் திருவாசகத்தின் பல இடங்ளில் காணப் பெறுகின்றன. அடிகளாருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டு வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் இவ்வேறுபாட்.ை நன்குனர்ந்திருந்தார் என்பதைச்