பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'சித்தத்தைத் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்” (திருமுறை: 7-39. 10) என்ற தொடர் தெரிவிக்கின்றது. சித்தத்தில் சிவம் வந்து நிறைந்துவிடுவதாகிய இறை அனுபவத்தை ஒருவர் பெற்றுள்ளார் என்பதைப் பிறர் எவ்வாறு அறியமுடியும்? இவ்வாறு நிறைந்தவர்களின் கண்களில் ஓயாது கண்ணிர்த் திவலைகள் துளித்துக் கொண்டே இருக்கும். கண்களில் குபுகுபு என்று கண்ணிர் பொங்குவதும் அருவிபோல் பாய்வதும் உண்டு. அடிகளார் குறிப்பிட்ட 'கண் பணி ஆட ஆட' என்றது. இதனின்றும் முற்றிலும் மாறுபட்டதாகும். துயரம் முதலிய உணர்ச்சிகள் மேல் மனத்தைப் பற்றி ஆட்டும்பொழுது கண்ணிர் ஆறாகப் பெருகுதல் உண்டு. மேல்மனம் அடிமனம் என்ற இரண்டிலும் பக்தி பெருக்கெடுக்கும்போது கண்ணிர் பெருகி ஓடுவதும் உண்டு. இந்த இரண்டு நிலைகளிலும் கண்ணிர் பெருகுவது பொதுத்தன்மை, இரண்டிற்கும் அடிப்படையான உணர்ச்சிகள் துயரம், இறைபக்தி) நிலைபேறுடையவை அல்ல. ஒரு விநாடியில் தோன்றி, விறு விறு என வளர்ந்து, பொங்கி, ஒரு நிலையை அடைந்து பிறகு இறங்கிவிடும் இயல்புடையவை இந்த உணர்ச்சிகள். இவை நீண்ட நேரம் நிலைபெற்றிருப்பதில்லை. என்றாலும், இவை உணர்ச்சிப் பெருக்கால் விளைபவை என்பதால் இவை உச்ச கட்டத்தை அடையும்போது கண்ணிர் பெருகி ஓடும். அடிகளார். இப்பாடலில் குறிப்பிடும் நிலை இவற் றிற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். திடீரென்று தோன்று வதோ பொங்குவதோ பக்திக்கு உண்டே தவிர, இறை அனுபவத்திற்கு இல்லை. பக்தி மேல்மனத்தில் தோன்றுவ தாகும் இறையனுபவம் சித்தத்தின் அடிப்பகுதியில்