பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 19 தோன்றுவதாகும். இந்த இறையனுபவத்தில் கண் பனிக் குமே தவிர, கு!பு குபு என்று அருவிபோல் கொட்டுவதில்லை. சித்தத்தில் சிவம் தோன்றுவது என்பது தொடக்க நிலை. சித்தத்தின் உள்ளே நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்குப் புறத்தே காணப்படும் மெய்ப்பாடு கண்பனித்தல் ஆகும். இரண்டாவது நிலை என்று சொல்லப்படுவது, சித்தம், சிவம் என்று இரண்டாக இருந்தவை ஒன்றாக ஆகிவிடும் நிலையாகும். அதனையே அடிகளார் 'பித்து எம்பிரானொடும் ஆட ஆட' என்றார். சித்தம் என்ற ஒன்று தனித்துநிற்கின்றவரையில் எவ்வளவுதான் அதில் சிவம் குடிகொண்டாலும், அந்தச் சித்தத்தை அடுத்துள்ள புத்தி, அகங்காரம் என்ற இரண்டும் இருந்தே தீரும். இந்த அகங்காரம் இருக்கின்றவரையில் சித்தம் முழுவதும் சிவம் நிரம்பினாலும், சித்தம் வேறு சிவம் வேறாகத்தான் இருக்கும். சித்தம், சிவம் என்று வெவ்வேறாக நிற்கும் இந்நிலை மாறி, சித்தம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் சிவத்துள் அடங்கிவிடுவதே இரண்டாவது நிலை ஆகிய பித்து நிலை ஆகும். அகங்காரம் தொழிற்படாமல் அடங்கிவிட்டால், மனிதர்களுக்குரிய தனித்தன்மை நீங்கிவிடுகிறது. அவ்வாறு உள்ளவர்களையே பித்தர் என்று உலகோர் கூறுவர். இறையனுபவத்தில் முழுவதுமாகத் தோய்ந்து நான்' என்பதை இழந்தவர்களும் பித்தர்போன்றே காணப்படுவர். அவ்வாறாயின் இவர்களிடையே உள்ள வேறுபாடு என்ன என்பதைச் சிந்தித்தால், ஒரு சிறிய வேறுபாட்டைக் காண «Juguph.