பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கோயில் மூத்த திருப்பதிகம் (அநாதியாகிய சற்காரியம் திருப்பள்ளியெழுச்சியை அடுத்துள்ள இருபது பாடல் களும் முறையே கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம் என்ற தலைப்பின்கீழ் தொகுக்கப்பெற்றுள் ளன. இந்தத் தலைப்புகளை யார் தந்தார்கள் என்று தெரிய வில்லை. இதற்கு முன்னர் உள்ள பகுதிகளைப் பொறுத்த மட்டில் பாடல்களில் உள்ள தலைப்பே அப்பகுதிக் களுக்குத் தலைப்பாகத் தரப்பெற்றுள்ளது. ஆனால், இந்த இருபது பாடல்களிலும் அவ்வாறில்லை. முதல் பத்துப் பாடல்களும் அந்தாதித் தொடையாக வந்து, பத்தாம் பாட்டின் இறுதிச்சொல் முதல்பாட்டின் முதற் சொல்லாக அமைந்திருத்தலைக் காணலாம். இந்தப் பத்துப் பாடல்களிலும் பொன்னம்பலமும், தில்லைக் கூத்தனும் பேசப்பெறுவதால் கோயில் பதிகம்’ என்ற தலைப்புப் பொருத்தமானதே ஆகும். காரைக்காலம் மையாரின் இரண்டு பதிகங்களுக்கும் உள்ள மூத்த திருப்பதிகம் என்ற பெயரில் ஈடுபட்டு, இதற்கும் அப்படி ஒரு தலைப்புத் தரவேண்டும் என்று நினைத்து, கோயில் மூத்த திருப்பதிகம் என்ற பெயரை யாரோ தந்திருக்க வேண்டும். அந்நாட்களில் பதிகம் என்ற சொல் தாளத்தோடு பாடப்பெறும் பத்துப் பாடல்களுக்குரிய பெயராக இருந்தது. தாளத்தோடு பாடப்பெறும் பதிக அமைப்பில் நாவரசர், சம்பந்தர் ஆகியோர் தோன்றுவதற்கு முன்னூறு ஆண்டுகள் முன்னரே முதன்முதலில் காரைக்காலம்மையாரால்