பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் மூத்த திருப்பதிகம் 273 எப்படிப் பார்த்தாலும் இத்தலைப்புகள் ஒரு சிறிதும் பொருந்தாதவை என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இத்தலைப்புகள் பொருத்தமின்றேனும், வேறு தலைப்புத் தந்து படிப்பவர்களைக் குழப்ப மனமின்மையான் எல்லாப் பதிப்புக்களிலும் காணப்பெறும் இத்தலைப்புக்களையே இங்கும் தந்துள்ளோம். 'அநாதியாகிய சற்காரியம்’ என்ற உள் தலைப்பு கொடுக்கப் பெற்றுள்ளது. இது முற்றும் பொருத்தமான தன்று. 378. உடையாள் உன் தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் 虚 இருத்தி அடியேன் நடுவுள் இருவிரும் இருப்பதனால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம் முடியா முதலே என் கருத்து முடியும்வண்ணம் முன் நின்றே t திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் நடைபெற்ற முக்கியமான இரண்டு செய்திகள் இங்கு நினைவுகூரப்பெற்றுள்ளன. குருநாதர் வடிவில் இருந்த திருப்பெருந்துறை நாயகர், தம் திருவடிகளில் வந்து வணங்கிய திருவாதவூரரை எதிரே உள்ள அடியார் கூட்டத்தின் நடுவில் ಡ್ಗಿಚ್ಡ செய்தார். அப்படி அமர்வதற்குமுன், குருநாதரின் எதிரே கூட்டமாக அமர்ந்திருந்த அடியார்களை அடிகளார் துரத்திலிருந்தே கண்டிருக்க வேண்டும். அடியார்கள் கூட்டமாக அமர்ந்திருப்பது, ஆலவாயிலிலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் பல இடங்களில் அன்றாடம் காணும் காட்சியாகும். இப்படிக் கூடியுள்ள அடியார் கூட்டத்தை அமைச்சராகிய வாதவூரர் பாராமல்