பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் : 21 சித்தம் அகங்காரம் முதலியவை மறைந்து பித்தாகிச் சிவனொடு பொருந்த முயலுதல் மற்றொரு நிலை; இந்த முயலும் நிலையையே அடிகளார் ‘புத்துமாய் மரமுமாய்” (399) என்ற பாடலில் எடுத்து விளக்குகிறார். உடலை வருத்தி ஊண் உறக்கம் அற்று இருப்பது இந்த இரண்டாவது நிலையின் வெளிப்பாடாகும். அத்தன் கருணை கீழ் இறங்கிவருதலின் பித்து அதனோடு இரண்டறக் கலந்து விடுதல் இறுதி நிலை, தத்தம் நிலைமை மாறாமல் ஒன்றுசேர்ந்து இருத்தல் இணைதல் எனப்படும். பொருந்துதல் என்பது தன் நிலைகெட மற்றொரு பொருளோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை. இங்குக் கூறிய மூன்று நிலைகளும் பரு உடம்புடன் கூடிய மக்களுக்கே உரியதாகும். முதல் நிலையில் காலடி எடுத்து வைப்பவர் முதல், பலரும் இப்பிறவி நீங்கவேண்டும், மீண்டும் பிறவா நெறி வேண்டும் என்று விரும்புகின்றனர். எவ்வளவு விரும்பினாலும், முயன்றாலும் அதனை எளிதில் பெறமுடியாது. மேலே கூறப்பட்ட மூன்று நிலை வளர்ச்சியில் பிறவி எப்பொழுது போகும் என்பதற்கு அடிகளார் அற்புதமாக விடையளிக்கிறார். அந்தக் கரணங்கள் நான்கும் அடங்கி ஒடுங்கி, எம்பிரான் கருணையில் பொருந்தத் தொடங்கியவுடன் பிறவி தானே கழன்று விடுகிறது. இந்த வழியில் வாராத பிறரைப் பிறவி தொடர்ந்து பொருந்திக்கொள்கிறது என்ற நுண்மையான கருத்தையும் பிறவி பிறரொடும் ஆட. ஆ..' என்ற தொடரில் பெற வைக்கிறார். மிக உயரிய இந்தத் தத்துவத்தை, பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களிடையே வைத்து, இறையனுபவம் எத்தகையது என்பதை எத்தகையவர்களும் புரிந்துகொள் ளும் வகையில் பாடுதல் அடிகளார்போன்ற இறையனுப வத்தில் தோய்ந்து வெளிப்பட்டவர்களுக்கே இயலுவதாகும்.