பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 205. மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய்திறந்து அம் பவளம் துடிப்பப் பாடுமின் நம்தம்மை ஆண்ட ஆறும் பணி கொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெருமானைத் தேடிச் சித்தம் களிப்பத் திகைத்து தேறி ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 11 மாடு-பக்கம். நகை-பல் பாடுதல், ஆடுதல், தேடுதல் ஆகிய மூன்றும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளவேனும் இவற்றிற்கு மேலோட்டமாகவும் வாலாயமாகவும் பொருள்கூறாமல் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினால் அடிகளார் பல நுண்மையான கருத்துக்களை இப்பாடலில் பெய்துள்ளார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். "வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம்பவளம் துடிப்பப் பாடுமின்’ என்ற தொடர், ஒளி பொருந்திய பற்கள் வெளியே தெரியுமாறு வாய் திறந்து பாடுமின் என்ற பொருளைத் தருவதாகும். அதாவது, முணுமுணுக்காமல் உரக்கப் பாடவேண்டும் என்பதை இத்தொடர் குறிக்கிறது. ஆனால், நன்கு வாயைத் திறந்து பாடும்பொழுது உதடுகள் ஒரளவு அசையுமே.தவிரத் துடித்தல் இயலாத காரியம். உணர்ச்சிப் பெருக்கில் வாயை நன்கு திறக்காமல் ஏதோ ஒன்றைச் சொல்லத் தொடங்கினால் அந்த உணர்ச்சி வெளிப்பாட்டின் விளைவாக உதடுகள் துடிக்கும். இந்நிலை தவிர நன்கு வாய் திறந்து பாடும்பொழுது உதடுகள் gifւգ-ւմւ35l கடினம். ஆனால், அடிகளார் இவை இரண்டையும் ஒன்றாக்கிப் பாடுகிறார் என்றால், வாய் திறந்து பாடப்பெறுகையில் வெளிவரும் சொற்கள் வெறும் ஒலிக்கூட்டம் அன்று என்பதைத் தெரிவிக்கின்றார்.