பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 23 வாய் திறந்தும் பாடவேண்டும்; உதடுகளும் துடிக்க வேண்டும் என்றால்- அந்தப் பாடலின் அடித்தளத்தில் இறைவன்மேல் கொண்ட காதல் பொங்கித் ததும்ப வேண்டும். அந்த உணர்வு வெளிப்படும்பொழுது உதடுகள் துடிக்கின்றன. அந்த உணர்வில் தோய்ந்து வெளிவரும் சொற்கள் அடக்கமுடியாத உணர்ச்சியுடன் இணைந்து வருதலின் வாயை நன்கு திறந்தே அவை வெளிவர வேண்டியிருக்கிறது. ‘காதலாகி, கசிந்து. கண்ணிர் மல்கி’ (திருமுறை 3- 49-) இறைவன் புகழைப் பாடத் தொடங்கினால் அப்பாடல் எவ்வாறு வெளிப்படும் என்ற அற்புதமான கருத்தை * Loop, Goupsurróðgir (physiological functions) epoolb அடிகளார் தெரிவிக்கின்றார். உதடுகள் துடிக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு முழுவதுமாக வாய் திறந்து பாடுமின்’ என்பதே அடிகளாரின் கூற்றாகும். உணர்ச்சிகள் எல்லை . மீறியவழி அதன் அடிப்படையில் வெளிப்படும் சொற்கள் வாயை முழுவதுமாகத் திறந்த நிலையில் உரக்கவே வெளிப்படும். இதனைப் படிக்கும் நமக்கு இவ்வளவு ஆழமானதும் அதீதமானதும் ஆகிய உணர்ச்சி என்ன காரணத்தால் தோன்றிற்று என்ற வினா மனத்தில் தோன்றுவது இயல்பு. அதற்குரிய விடையை அடுத்த அடியில் அடிகளார் விளக் குகின்றார். நம்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும்தான் இந்த உணர்ச்சி தோன்றுவதற்குக் காரண மாயின. நம்தம்மை என்று பன்மையால் கூறினாரேனும் ஆளப்பெற்றதும் பணிக்கப்பெற்றதும் அவர் ஒருவரைத்தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். காதல் இன்பத்தில் ஈடுபட்டவர்கள் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தம்மைப்போலவே இன்பத்தில் ஈடுபட்டுள்ளன என்று நினைப்பது இயல்பு. இந்த கருத்துப் பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ஒன்றாகும்.