பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இப்பத்து பாடல்களும் அனுபவத்தில் ஏற்பட்ட சுவையை-கரும்பு, தேன், கட்டி என்றெல்லாம் சொல்லிக் செல்லுதலின் அனுபவச் சிந்தனை என்றோ அனுபவ வெளிப்பாடு என்றோ உள்தலைப்பு தந்திருப்பின், ஒருவாறு பொருந்தலாம். ஆனால் அனுபோக இலக்கணம்' என்பது வழக்கம்போல் பொருந்தாமல் நிற்கின்றது. 388. மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே ஊறி நின்று என் உள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே t மாறிநின்று-ஒன்றுபோனவழி ஒன்று போகாமல் மாறுபட்டு நின்று. ஐந்தின்வழி-புலன்கள் ஐந்தின் வழியாகிய பொறி. உள்ளவா காணசொரூபநிலையை யான் அறிய. தேறல்-தேன். உள்ளத்துள்ளே பரஞ்சோதி தோன்ற வேண்டுமாயின் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முக்கியமான செய்தியை அடிகளார் இங்கே பேசுகின்றார். ஒர் அறைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட தீபம் அணையாது நிற்கவேண்டுமாயின், அந்த அறையுள் அமைந்துள்ள அனைத்து ஜன்னல்களும் மூடப்பட வேண்டும். இன்றேல் ஜன்னல் வழியாக வரும் ஊதைக் காற்று நடுவில் உள்ள தீபத்தை அணைத்துவிடும். மனிதனும் அப்படித்தான். அவனுக்குள் ஐந்து பொறிகளும் அவற்றின்வழி இயங்கும் ஐந்து புலன்களும் ஐந்து பெருவழிகளை அமைத்துக்கொண்டு அவனுடைய நெஞ்சினுள் ஒன்று மாறி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்