பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 295 கின்றன. இந்த வழிகளை அடைத்தாலொழிய உள்ளே இருக்கும் சோதி மறைந்துவிடும். வஞ்சப் புலனின் வழியை அடைத்ததால் அவருடைய உள்ளத்தில் பரஞ்சோதி எழலாயிற்று. இதனை எழு பரஞ்சோதி என்று வினைத் தொகை வாய்பாட்டில் கூறினமையில், பொறி வழிகள் அடைபட்டுவிட்ட காரணத்தால் எந்நேரமும் அடிகளா ரின் உள்ளத்தில் பரஞ்சோதி சுடர்விடலாயிற்று. எந்த நேரமும் பரஞ்சோதி இருத்தலின் ஊறிநின்று எழுபரஞ் சோதி என்றார். சோதி உள்ளே இருப்பினும் அதைப் புரிந்து கொள்ளுதல் அவ்வளவு எளிதான காரியம் அன்று. எனவே, அடிகளார் ‘பிரபஞ்சோதியே! அடியேன் காண வெளிப் போந்து அருள்வாயாக’ என்று வேண்டிக் கொள்கிறார். இந்த இரண்டு அடிகளிலும் பொறிவாயில் ஐந்து அவித்தவர்கள் உள்ளத்து எழுபரஞ்சோதியானது அவர்கள் காணுமாறு வெளிப்பட்டு அருள்புரியும் என்ற தத்துவத்தை மிகச் சுருக்கமாகவும், அழகாகவும் அடிகளார். தெரிவித்து விட்டார். பொறி புலன்களைக் கடந்து, அந்தக்கரணங்களையும் கடந்து, வாக்கு, மனம் ஆகியவற்றையும் கடந்து ஒளிவடி வாக நிற்கும் ஒரு பொருளை அமுதே! தேறலின் தெளிவே!’ என்று சொல்வது புதுமையானதன்றோ! குழந்தையைக் கொஞ்சுபவர்கள் அன்பு மேலிட்டால் கையில் உள்ள குழந்தையை கற்கண்டே சர்க்கரைக் கட்டியே! என்று கொஞ்சுவதைக் கண்டிருக்கிறோம். அதேதான் இங்கும். ; : இப்பதிகத்தை அடிகளார் எங்கிருந்து பாடினார் என்பதை நாம் அறியோம். ஆனால் அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ்சோதி என்ற சொற்கள் வெளிப்