பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பட்டவுடன் திருப்பெருந்துறை நினைவுக்கு வருகிறது. அடிகளார் உள்ளத்தினுள்ளே பெருஞ்சோதியாக இறைவன் தோன்றியதும், வஞ்சப் புலன்கள் ஐந்தும் ஒரே விநாடியில் அடைபட்டதும், பரஞ்சோதி வெளிப்பட்டதும் நினைவுக்கு வந்தவுடன் 'திருப்பெருந்துறைஉறை சிவனே' என்ற சொற்கள் வெளிவருகின்றன. 389, அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருக என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு முன்பும் ஆய் பின்பும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு இலா முதலே தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடைச் சிவபுரத்து அரைசே 2 என் பரம்-என் பொறுப்பு. கைம்மாறு-பிரதியுபகாரம் திருப்பெருந்துறை அனுபவத்தை முன்பு பல பாடல் களில் பேசியுள்ளாரேனும் இப்பாடலின் முதல் இரண்டு அடிகளில் உள்ள பதினான்கு சீர்களில் முதல் பதினோரு சீர்களில் மிக மிக விளக்கமாகவும் துணுக்கமாகவும் கூறியுள்ளார். யாக்கை என்று சொல்லப்படும் இப் பருஉடம்பு புறச்சூழ்நிலை காரணமாகக் கசிவதும், உருகுவதும் உண்டு, இந்தப் புறச்சூழ்நிலை யாக்கையின் உள்ளே உள்ள ஆவியைப் பற்றுவதோ, தாக்குவதோ இல்லை. ஆவி கசியவோ, உருகவோ வேண்டுமானால் உடம்பினுள் இருந்தும் தனித்து நிற்கும் அந்தக்கரணங்களில் உள்ள மனமும், சித்தமும் அன்பினால் நிறைய வேண்டும். சாதாரண உலகப் பொருள்கள், உறவுகள் போன்றவை களிடமும் அன்பு தோன்றுகிறது. ஆனால், இந்த அன்பு