பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கோயில் திருப்பதிகம் - 297 ஆவியை உருக்கும் அன்பிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். பெயரளவில் இரண்டிற்கும் அன்பு என்ற பெயரே இருப்பினும் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது நலம். * உலகப் பொருள்களிடம் தோன்றுகின்ற அன்பு ஆழமற்றது, மாறும் இயல்புடையது, நிலையானதன்று. இதற்கு மாறாக ஆவியை உருக்கும் அன்பு நிலையானது; ஆழமுடையது; என்றும் மாறாதது. மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கினையும் நிரப்பி, அவற்றை அடுத்து ஆவியையையும் பற்றி அந்த ஆவியை உருக்கும் இயல்புடையதாகும் இந்தப் பேரன்பு. கண்ணப்பர், மணிவாசகர், மூவர் முதலிகள், ஆழ்வார்கள் ஆகிய அனைவரிடமும் ஆவியை உருக்கும் இந்தப் பேரன்பே குடிகொண்டிருந்தது. . - அறுபத்து மூன்று நாயன்மார்களும் இந்தத் தொகுப்பின் உள்ளேயே வருவர். இந்தப் பேரன்பு அவர்களுள் புகுந்தவுடன் அவர்களுடைய அந்தக் கரணங்கள் செயலிழக்கின்றன. எளிதில் போக்க முடியாத அகங்காரங்கூட இவர்களைப் பொறுத்தமட்டில் செயலிழந்துவிடுகிறது. அவர்கள் ஆவியைப் பற்றிநிற்கும் உருக்கம் காரணமாக, வெளிப்படும் ஆனந்தத்தில் இந்த அடியார்கள் எந்நேரமும் லயித்துள்ளார்கள். ஆதலின், இவர்கள் செய்யும் செயல்களை நம்முடைய அறிவு கொண்டு ஆராய்வதோ, அளப்பதோ இயலாத காரியம் மட்டுமன்று; தகாத செயலுமாகும். அன்பு என்ற பொதுப்பெயரில் இரண்டு மாறுபட்ட அன்புகள் இருப்பதை முன்னர்க் கண்டோம். இவை ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அதேபோல மனிதர்கள் என்ற பொதுப்பெயரில் இந்த அடியார்களும்