பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 உள்ளார்கள்; நாமும் உள்ளோம். என்றாலும், இரு சாராரிடையே கடல்போன்ற வேற்றுமை உண்டு. இந்த அடிப்படையை நன்கு புரிந்துகொண்டால்தான் இப்பாடலில் பதினோரு சீர்களில் தமக்கு நேர்ந்த ரசவாதத்தை அடிகளார் கூறுவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆம்! இது ஒரு ரசவாதம்தான். பெருங்கல்வி கற்று, பெரும் பதவி வகித்துக்கொண்டு சுற்றித் திரிந்த திருவாதவூரர் ஒரே வினாடியில் எல்லாவற்றையும் துறந்து, 'நாடவர் பழித்துரை பூண் அதுவாகக் கொண்டு (திருவாச:4-69) தம்மை மறந்து உலவும் மணிவாசகராக மாறினார். அமைச்சராக இருக்கும் ஒருவர் அம்மானை, கோத்தும்பி, தெள்ளேணம், பூவல்லி, ஊசல் முதலிய சிறுமியர் விளையாடல்களைப் பார்த்திருக்கக் கூடுமேனும் அவைபற்றிப் பாட வாய்ப்போ ஒழிவோ இருந்திராது. திருவாதவூரர் என்பவர் இவ்வாறு பாடினார் என்றால், திருவாதவூரராக இருந்து இதனைப் பாடவில்லை. இரும்பு பொன்னாகும்போது இரும்பின் இயல்பு முற்றிலும் மாறி, பொன்னாக ஆவதுபோல், திருவாதவூரர் என்ற அமைச்சர் முற்றிலும் மாறி, மணிவாசகர் என்ற அடியாராக மாறிவிட்டார். அந்த மாற்றம் நிகழ்ந்த முறையைத்தான் இப்பாடலின் முற்பகுதி குறிக்கின்றது. ஆவியோடு ஆக்கையும் சேர்ந்து முதலில் கசிந்தது. அடுத்து உருகிற்று; உருக்கத்தை அடுத்து ஒரு புதிய பொருள் தோள்றிற்று அப்பொருளின் பெயர் ஆனந்தம் என்பதாகும். கசிவது வெளியே தெரியாது நடைபெறு வதாகும். உருக்கத்தை வெளிப்படுத்தக் Gាfr பெருகுதல், உடல் கம்பித்தல் முதலிய மெய்ப்பாடுகள் உதவுகின்றன. அடுத்துத் தோன்றும் ஆனந்தம் கூர்ந்து நோக்குபவர்களுக்கு மட்டுமே ஒரளவு தெரியக்கூடிய