பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 299 ஒன்றாகும். நாம் வாழ்வில் காணும் மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம் ஆகியவற்றிலிருந்து இந்த ஆனந்தம் முற்றிலும் மாறுபட்டதாகும். மகிழ்ச்சி முதலியவைபோல புறமணத்தில் தோன்றுவதன்று ஆனந்தம். அந்தக்கரணம் நான்கையும் கீழ்ப்படுத்தித் தோன்றுவது என்று முன்னரே குறிப்பிட்டோம். இந்த ஆனந்தம் நீடிக்கின்றவரையில் கசிவதும், உருகுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். அதனாலேயே அடிகளார். 'ஆனந்தமாய்க் கசிந்துருக என்று கூறினார். - அடிகளாருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ரசவாதத்தினால் வெளிப்பட்டதுதான் ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும் நிலை. இந்த ரசவாதத்தில் ஈடுபட்டு, அதைப்பற்றி நினைக்கும் நாம், ஒன்றை மறந்துவிடக்கூடாது. இது நிகழக் காரணமாய் இருந்தது எது என்பதை 'அன்பினால்’ என்ற ஒரே சொல்லில் அடிகளார் கூறிவிட்டார். பாடலின் முதலடியைப் படிக்கும் நமக்கு ஒரு தவறான முடிவு தோன்றக் கூடும். பேரன்பை வளர்த்துக் கொண்டதன் மூலம் இவற்றை அடிகளார் பெற்றார் என்ற நினைவு தோன்றக்கூடும் அல்லவா? அது தவறு என்ற கருத்தைத் தெரிவிக்கவே, ‘என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்’ என்று பேசுகிறார். அதாவது, தம் தகுதிக்குப் பொருந்தாத இந்தப் பேரருளை தமக்குத் தந்தார் என்று கூறுவதன் மூலம், இந்தப் பேரன்பு தோன்றுவதும் அதன் பயனாக மேலே கூறிய ரசவாதம் நடைபெறுவதும் அனைத்துமே அவன் அருளே தவிர வேறில்லை என்பதை விளக்கமாகக் கூறுகிறார். இந்த மாபெரும் உபகாரத்தைச் செய்த குருநர்தருக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்? எதைச் செய்தாலும் அந்த இன்னருளைக் குறைத்து மதிப்பிட்டதாகவே ஆகிவிடும். ஆகவே, அமைச்சராக இருந்து தராதரம் பார்ப்பதில் அனுபவம் பெற்ற அடிகளார், அவன்