பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அருளுக்கு எந்த ஒன்றையும் கைம்மாறாகச் செய்ய முடியாது என்பதை அறுதியிட்டுக் கூறும்முறையில் 'யான் இதற்கு இலனொர் கைம்மாறு' என்று கூறி முடித்து விடுகிறார். 390. அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை புரை புரை கனியப் புகுந்துநின்று உருக்கிப் பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே திரை பொரா மன்னும் அமுதத் தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஒர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே 3 புரை புரை கனிய-மயிர்க்கால்கள்தோறும் நெகிழ. திரை பொரா மன்னும்-அலை மோதாமல் நிலைபெற்ற. இப்பாடலின் நான்காம் அடி ஆழ்ந்து சிந்தப்பதற்குரியது. உலக உயிர்களுள் உயர்ந்து நிற்கும் மனிதனுக்குரிய தனிச் சிறப்புக்களுள் அவனது பேசும் ஆற்றலும் ஒன்றாகும். உரை என்று சொல்லப்படும் இது எண்ணத்தோடு தொடர்புடையது. எண்ணம் என்பது உரை அல்லது சொல் வடிவில் வெளிவருவது. அகத்தே நிகழும் எண்ணமும், புறத்தே வெளிப்படும் சொல்லும் மனிதனுடைய மூளையில் நடைபெறுவனவாகும். உணர்வு என்பது இதிலிருந்து மாறுபட்டதாகும்.அது இரு வகைப்படும். ஒன்று மனத்தில் தோன்றுவது; மற்றது உள்ளத்தில் தோன்றுவது. மனத்தில் தோன்றும் பாலுணர்வு பசியுணர்வு போன்றவற்றை ஒரளவு சொற்களால் கூறமுடியும் இதனை உரை உணர்வு என்று கூறலாம்). உள்ளத்தில் தோன்றும் பக்தி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் சொற்களுக்கு முழுவதுமாக