பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 301 இல்லை. இதனை உரை இறந்த உணர்வு எனலாம்). இந்த உணர்வை வெளிப்படுத்தச் சொற்கள் பயன்படா. எனினும், முகத்தில் தோன்றும் மலர்ச்சி, கண்களில் தோன்றும் கண்ணிர், நாக்குழறுதல் முதலிய மெய்ப்பாடுகள் மூலம் இதனை ஒரளவு அறிய முடியும். இதனை நம் முன்னோர் நன்கு விளங்கிக் கொண்டனர். இறைவன் வாக்கு, மனம், லயம் கடந்தவன் என்பதை அடிகளாரே உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி" (திருவாச. 4-124) என்று முன்னரும் கூறியுள்ளார். அப்படியானால் இந்தப் பாடலின் நான்காவது அடியிலும் அதே கருத்தைக் கூறியுள்ளாரா என்றால், இல்லை என்பதே விடையாகும். - அந்தக் கருத்துக்குமேல், மிக நுண்மையான மற்றோர் கருத்தையும் இந்த நான்காவது அடியில் பெய்துள்ளார். 'உரை, உணர்வு இறந்து நின்று உணர்வது ஒர் உணர்வே' என்பதே அந்த அடியாகும். இவ்வடியில் உணர்வு என்ற சொல் மும்முறை பயன்படுத்தப்பெற்றுள்ளது. முதலாவது வரும் உணர்வு, உரை உணர்வு இறந்தவன் இறைவன் என்ற பொருளைத் தருவதாகும். இந்த உறை உணர்வு மனத்தில் தோன்றுவதாகும் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அப்படியானால் அடுத்து வரும் இரண்டு உணர்வுகளும் இதே பொருள் உடைய சொற்கள்தாமோ என்றால், இல்லை என்பதே விடையாகும். முதலில் உள்ள உரை உணர்வு மனத்தில் தோன்றுவதால் நம்முடைய ஆட்சிக்குட்பட்டவை. சொற்களின் மூலம் எண்ணுவதும் உணர்வில் ஆட்படுவதும் நம்முடைய செயலாகும். இவை இரண்டும் நடைபெறும்போது நம்மை நாம் மறப்பதில்லை. மனம் சித்தம் என்ற இரண்டும் உணர்வில் லயித்துவிட்டால்கூட, புத்தியும் அகங்காரமும் தனியே நின்று, உணர்வில் அமிழ்ந்துள்ள மனம், சித்தம் என்ற