பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இரண்டையும் தம் ஆளுகைக்கு உட்படுத்தி, நான் பேசுகிறேன்; நான் உணர்கின்றேன்’ என்ற எண்ணம் அடித்தளத்தில் இருக்குமாறு செய்யும். எந்த நிலையிலும் இந்த உரை உணர்வில் அந்த நானிலிருந்து விடுபடுவது கடினம. அடிகளார் போன்ற இறையனுபவ ஞானிகள் மட்டுமே நானோடு தொடர்புடைய இந்த உரை, உணர்வைக் கடந்து நிற்கமுடியும். அப்படிக் கடந்துநிற்கும் நிலையில் ஏற்படுகின்ற அனு பவத்திற்கும் உணர்வு’ என்ற பெயரைத்தான் தரவேண்டி யிருக்கின்றது. இறையன்பு, பொருளன்பு என்ற இரண்டிற்கும் அன்பு என்ற ஒரே சொல்லைப் பயன் படுத்தியதுபோல, நானோடு தொடர்புடைய உணர்வு, 'நானை'க் கடந்து நிற்கும் உணர்வு என்ற இரண்டிற்கும் 'உணர்வு’ என்ற ஒரே பெயரைத்தான் கொடுக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், இந்த வேறுபாட்டை வலியுறுத்த வேண்டி, இரண்டு சொற்களை இரண்டு 'உணர்வுகளுக்கு நடுவே வைக்கின்றார். உரைஉணர்வு' இறந்து என்றதால் 'நானோடு தொடர்புடைய உணர்வு இறந்ததைக் குறிக்கின்றார். அடுத்து, நின்று' என்ற சொல்லைப் பயன்படுத்தியதால், உரை உணர்வு இறந்த இடத்தில் இப்புதிய உணர்வு தோன்றி நிற்கின்றது என்பதைக் குறித்தவாறாயிற்று. எனவே, இந்த உரையிருந்த உணர்வில் பொறி புலன்கள் அந்தக்கரணங்கள் ஆகியவற்றின் தொடர்பு ஒரு சிறிதும் இல்லை. நானோடு தொடர்பற்ற உணர்வு, இறைவயனுபவ மெய்ஞ்ஞானிகளுக்கு மட்டுமே தோன்றக்கூடிய ஒன்றாகும். அப்படியானால், இந்தப் சிறப்பு உணர்வினால் என்ன பயன் என்ற வினா தோன்றுமன்றோ? அதற்கென ஒரு