பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 309 ரகுவம்சத்தைக் காளிதாசன் தொடங்குவதும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும். 393. இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே கரந்தது ஒர் உருவே களித்தனன் உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு இன்றே 6 நிரந்த-எங்கும்பரவிய. கரந்தது-மறைந்தது. இப்பாடலின் முதலடியில் உளங்கனிந்து உருகுகின்ற உள்ளத்தில் சோதி வடிவாய் எழுந்தருளுகின்றான் என்று கூறவந்த அடிகளார் இரந்து இரந்து என்று இருமுறை ஏன் கூறவேண்டும்? நம்முடைய மனத்தில் தோன்றும் உருக்கம், நமது செயலால் நமது முயற்சியால் நமது செயற்பாட்டால் தோன்றுகிற ஒன்றாகும் என்ற தவறான எண்ணம் பலருடைய மனத்தில் நிலைபெற்றுள்ளது. பிறருடைய துயரம் கண்டபொழுது உருகுகின்ற உள்ளம் உடையவர் என்று சிலரை நாமே குறிக்கின்றோம். உள்ளத்திற்கு உள்ள பல்வேறு இயல்புகளில் உருகுகின்ற இயல்பும் ஒன்றாதலின், அதனைப் புகழ்ந்து பெரிதுபடுத்தி நாம் பேசுகிறோம். அடிகளாரின் இரந்து இரந்து உருகி’ என்ற தொடர் நாம் கொண்டுள்ள தவறான முடிவை மறுத்து உரைக்கின்றது. உண்மையான உருக்கம் உள்ளத்தில் ஏற்படவேண்டுமானால் அதை அந்த உள்ளத்தைப் படைத்தவனிடம் பலகாலம் வேண்டி வேண்டிப் பெற வேண்டும். இவ்வாறு பெறுகின்ற உருக்கம், அவன் தந்தது