பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 ஆதலின், . அந்த உருக்கத்தைப் பெற்றவன் செருக்குக் கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லை. உருக உருக சோதி எழுகின்றது என்கிறார் அடிகளார். உருக என்பதும் எழுகின்ற என்பதும் காரணகாரிய எச்சங் களாய் நின்று உருகுதல் ஆகிய காரணம் மிகுதிப்பட மிகுதிப்பட சோதி எழுகின்ற காரியமும் மிகுதிப் படுகின்றது 394, இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை - சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே 7 கடிந்து-நீங்கி. உள்ளத்து எழுகின்ற நினைப்பு:அற நினைந்தேன்நினைப்பும் மறப்பும் அற்ற அதீத நிலைமையிைல் இருந்தமையால் இங்ங்ணம் கூறினார். திருப்பெருந்துறையில் குருவடிவில் அமர்ந்திருந்த பெருமகனார் வழியோடு சென்றவரைத் தம்பால் இழுத்து அவர் கேளாதிருக்கவும் தம் அருளைச் சொரிந்தார் ஆதலின் இன்று எனக்கு அருளி என்றார். இறையருளைக் கோடிக்கணக்கான உயிர்கள் வேண்டி நிற்கின்றனர். பொன்னையும், பொருளையும், போகத்தை யும் அருளவேண்டும் என்று வேண்டி நிற்பவர் பலர். இவை ஒன்றும் வேண்டா, அன்பு, அறன், அருள் என்ற மூன்றுமே வேண்டும் என்று வேண்டி நிற்போர் மிகமிகச் சிலரே ஆவர். இந்த மூன்றிலும் அருளே வேண்டும் என்று