பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 311 வேண்டுவோர் அந்த மிகச் சிலருள்ளும் ஒருவர் இருவரே ஆவர். அருளை வேண்டிநிற்போருக்கு அவன் அருள் எவ்வாறு கிடைக்கின்றது? அருள் கிடைத்துவிட்டது என்பதை எவ்வாறு அறிவது? அதனைக் கண்டுகொள்ள மிக எளிதான வழி ஒன்றைச் சொல்கிறார் அடிகளார். எந்த விநாடி அவன் அருளினானோ அதே விநாடி ஆழ்மனத்தில் உள்ள அஞ்ஞான இருள்தானே விலகி விடுகிறது. இருள் விலகின இடம் சும்மா இருப்பது இல்லையே? உலக இருள் மறையும்பொழுது கதிரவன் தோன்றுவதுபோல அஞ்ஞான இருள் மறையும்பொழுது உள்ளத்தே எழுகின்ற ஞாயிறே போன்று இறைவன் காட்சியளிக்கின்றான். எழுகின்ற ஞாயிறு என்று கூறியவுடன் அந்த ஞாயிற்றுக்குரிய தோற்றம், இருத்தல், மறைதல் ஆகிய முச்செயல்களும் இறைவனுக்கும் ஏற்றப்படும் தவற்றைத் தவிர்ப்பார்போன்று எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற” நின் தன்மை என்ற சொற்களால் அத்தவறு வாராமல் பரிகரிக்கின்றார். உள்ளத்துள் இந்த ஞாயிறு தோன்றி விட்டால் பிறகு அது மறைவதேஇல்லை. அந்த ஞாயிற்றை நாம் எவ்வாறு போற்றுவது? உலகியலில் ஒன்றை நினைந்தேன் என்றால் முன்னர் மறந்து இப்பொழுது நினைந்தேன் என்ற பொருள் வரும். அதாவது உள்ளத்து எழுந்து அங்கேயே நிலைகொண்டுள்ள ஞாயிற்றை ஒரோவழி மறந்து ஒரோவழி நினைக்கும் தவறு நேர்ந்துவிடலாம் அல்லவா? அதனைப் போக்குவதற் காகவே நினைப்பு அற நினைந்தேன்’ என்கிறார். நினைதல் என்ற நிகழ்காலத் தொழிற்பெயர், நினைப்பாக மாறும் பொழுது, அது இறந்தகாலமாகிவிடுகிறது. மறந்துவிட்ட அந்த நினைப்பு மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர