பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நேரிடுகிறது. தோன்றலும் மறைதலும் ஆகிய இரண்டும் ஒழிந்து நினைவு மாறாமல், மறையாமல், மறுபடியும் புதிதாகத் தோன்றாமல் இருக்கும் நிலையை நினைப்பு அற நினைந்தேன்’ என்றார். நினைப்பற நினைக்கப்படும் அந்தப்பொருள் எது? அது 'நீ தான், நீ என்று அறிந்த பிறகு உன்னையன்றி வேறெதுவும் இல்லை ஆதலால் பிறிதொரு பொருளென்றோ, மற்றொரு பொருளென்றோ சுட்டி நினைப்பதற்கு வேறு எதுவும் இல்லை. பொருள்கள் நாம, ரூபங்களில் வேறுபட்டிருப்பினும், அந்த வேறுபாட்டி னிடையே ஒருமைப்பாடாக இருப்பவன் நீயே என்பதை அறிவிக்க, நீ அலால் பிறிது மற்று இன்மை’ என்றார். இவ்வாறு பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருளும் நீயே என்று சிந்திக்கும்பொழுது ஒரு சிறு பிரச்சனை தோன்றத்தான் செய்கிறது. நிலையியற்பொருள்-இயங்கியற் பொருள், உயர்திணை-அஃறிணை, ஒரறிவு உயிர் - ஆறறிவு உயிர் என்ற இத்தனை வேறுபாடுகளிடையேயும் அவனைத்தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறினால், நம்முடைய சிற்றறிவு அதனை ஏற்கத் தயங்குகிறது. இந்தக் குறைபாட்டைப் போக்க மாபெரும் விஞ்ஞானியாகிய அடிகளார், ஒரு சிறந்த விஞ்ஞானப் புதுமையைப் பேசுகிறார். இத்தனை வேறுபாடுகளுடைய பொருள்களும் அணு வடிவின் பெருக்கமே ஆகும். எனவே எதிர்வழிச்சென்று இப்பொருளைகளைத் பிரித்துக்கொண்டே சென்றால் எஞ்சுவது அணுவேயாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை அணுதான் மூலப்பொருள், உடைக்கமுடியாது என்றும் பொருளின் இறுதியான வடிவு அணுவே என்றும் விஞ்ஞானம் கூறிவந்தது.