பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 313 இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்விஞ்ஞான முடிவு தகர்க்கப்பட்டு அணுவுக்குள் ஒரு தனி உலகமே இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்று வரையில் இதன் முடிவான பொருள் இது என்று விஞ்ஞானத்தால் கூறமுடிவியல்லை. சென்ற பத்தாண்டுகளில் இறுதியாக எஞ்சி நிற்கும் பொருளுக்கு GlĮ55iņ si, urtřLų-šGair (Negative Particle) argàrp 3, p முன்வந்தனர். அருளாளராகிய அடிகளார் 'சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்’ என்று கூறுவது அணுவின் இறுதி வடிவமாக இருக்கும் இந்த நெகடிவ் பார்ட்டிக்கிள்தானே என்று நினைப்பதில் தவறில்லை. நான்காவது அடியில் வரும் ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்றில்லை” என்ற தொடர் "நீயலால் பிறிது மற்றின்மை” என்று முன்னர் கூறியதன் விளக்கமாகும். 395. பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்துப் படர்ந்தது ஒர் படர் ஒளிப் பரப்பே நீர் உறு தியே நினைவதேல் அரிய நின் மலா நின் அருள் வெள்ளச் சீர் உறு சிந்தை எழுந்தது ஒர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி 8 பார்-பூமி. பதம்-பிரமன் முதலியோர் பதவிகள். நீருறு தீ-சுடுநீரில் கலந்துள்ள வெப்பம். ஆனந்தமாக்கும் சோதி-ஒளிக்குத் தெறல் இயற்கையாயிருக்க இவ்வொளி ஆனந்தத்தை விளைவிக்கின்றது எனபதாம.