பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 315 அப்படிப் பொதுவாக உள்ள இறைவனை என்சோதி” என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? சற்று நின்று நிதானித்தால் 'என் சோதி என்று அடிகளார் கூறும் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். 'நான்’ என்பதை விட்டொழித்த அடிகளாருக்கு என்’ என்பது எங்கிருந்து வந்தது: இங்கு அடிகளார் கூறும் 'என்' நம் போன்றவர்கள் கூறும் ‘என்னிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். அடிகளார் கூறும் 'என்', பொறி, புலன்கள், அந்தக்கரணம் என்பவற்றின் குறுகிய அடிப்படையில் தோன்றும் 'என்' அன்று. இவ்வாறு தோன்றும் என், மிகமிகக் குறுகியதாய் உடம்புக் கூட்டுக்குள் அகப்பட்டு நிற்கும் நம் போன்றவருடைய 'என்' ஆகும். • அடிகளாரின் என்சோதி என்பது பரமாத்மா விலிருந்து ஜீவாத்மாவைப் பிரித்துக் காட்டும் என்னாகும். சோதி என்பது அவன். அந்தச் சோதியோடு பெரும் தொடர்புடையதாய், வேறு எவ்விதத் தொடர்பும் இல்லாததாய் விளங்கும் ஜீவாத்மாவையே என்’ என்ற சொல்லால் அடிகளார் இங்கு விவரிக்கின்றார். அந்தச் சோதி வடிங்கும் அருள் அனுபவத்தைப் பெற்று, அதனுள்ளேயே அமிழ்ந்துவிடும் ஜீவாத்மாவைத்தான் என்’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். 396. சோதியாய்த் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே திது இலா நன்மைத் திருவருள் குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே 9