பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 317 குருவடிவில் அமர்ந்திருந்தவர் ஆண்வடிவுடைய ஒருவர் ஆவார். அந்த ஆண் வடிவ்ம் திருவடி தீட்சை செய்து, திருவாதவூரரை மணிவாசகராக மாற்றியதென் னவோ உண்மைதான். அம்மாற்றம் பெற்ற அடிகளார், எதிரே உள்ள குருவடிவில் உமையொரு பாகனையே கண்டார். என்றாலும் என்ன? அடிகளாரால் சிவன் எனத் தேறப்பெற்றவன் புவனியில் சேவடி தீண்டும்படியாக இருந்த குரு அல்லவா? எனவே, அடிகளாரைப் பொறுத்தமட்டில் குருவைப் பார்த்தவுடன் ஏற்பட்ட முதல் எண்ணப் பதிவு (first impression) ஆண் வடிவம் அல்லவா? ஆகவேதான், ஒருவன் என்ற சொல் அடிகளார் மனத்தை விட்டு நீங்கவே இல்லை. அருவாம் ஒருவனே என்று கூறுவது மாறுபாடுடைய இரண்டு சொற்களின் கூட்டாகும் என்பதை அறியாதவர் அல்லர் அடிகளார். அப்படி யிருந்தும் இந்த இரண்டு சொற்களையும் ஒன்றுசேர்த்துப் பேசுவதில்தான் அவரது அனுபவ விளக்கம் நன்கு தெரிகிறது. சோதியாய்த் தோன்றும் உருவமே' என்பதும் இதுபோன்ற முரண்பட்ட சொற்களின் இணைப்புத்தான். ஆதியே, நடுவே, அந்தமே என்று கூறவந்தவர், 'சொல்லுதற்கரிய' என்ற சொற்களை ஏன் முதலில் பயன்படுத்த வேண்டும். ஆதி, நடு, அந்தம் என்பவை காலம், இடம் (space, time) என்பவற்றால் வரையறுக்கப் பட்ட எல்லையுடையன. இந்த எல்லை எவ்வளவு பெரிதாக இருப்பினும் எல்லை எல்லைதான். ஆனால் விரிந்துகொண்டே செல்லும் இயல்புடைய பிரபஞ்சத் திற்குக்கூட இடவகையால் எல்லைவகுப்பது கடினம். காரணம், விநாடிக்கு விநாடி இப்பிரபஞ்சம் விரிந்து கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சத்தின் விளிம்பில் ஒரு பகுதியைத் தொட்டு இதுதான் ஆதி என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த எல்லை விரிந்து ஆதி என்று